விவேகானந்தர் 150வது பிறந்தநாள்: 150 கிராமங்களில் சைக்கிள் பேரணி
விவேகானந்தர் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜன.26-ம் தேதி சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்-மாணவர்கள்


விவேகானந்தர் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜன.26-ம் தேதி சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்-மாணவர்கள் கொண்ட 10 குழுக்களாக 150 கிராமங்களுக்கு சைக்கிள் பேரணியாக சென்று விவகானந்தரின் கருத்துகளை பரப்புகின்றனர்.
இதுகுறித்து பள்ளி தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்ததாவது:
பேரணியில் விவகானந்தரின் உருவப்படங்கள் மற்றும் பொன்மொழிகள் அடங்கி பதாதைகளுடன் கிராமங்களுக்கு சென்று விவகாந்தரின் கருத்துகள் மற்றும் பெருமைகளை துண்டு பிரசுரங்கள் வழங்கியும், வீடியோ காட்சி மற்றும் பாடல்கள் வாயிலாக எடுத்துரைப்பார்கள் பேரணியை உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தொடங்கி வைக்கிறார். கிராமங்களில் ஆங்காங்கே கிராமத் தூய்மை மற்றும் துப்புரவு தொடர்பான பணிகளிலும் மாணவர்கள் ஈடுபடுவார்கள் என சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...