அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கூடங்குளத்தில் ஜோதிடர் கொலைவழக்கு: இளைஞருக்கு ஆயுள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரைச் சேர்ந்த சிவசங்கரன் மகன் மீனாட்சிசுந்தரம். இவர், கூடங்குளத்தில் ஜோதிட நிலையம் நடத்தி வந்தார். இவரது நண்பரான

News image
Updated On :27 ஜனவரி 2014, 1:27 pm

முத்துகுமார்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ஜோதிடர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரைச் சேர்ந்த சிவசங்கரன் மகன் மீனாட்சிசுந்தரம். இவர், கூடங்குளத்தில் ஜோதிட நிலையம் நடத்தி வந்தார். இவரது நண்பரான புளியங்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ரஞ்சித் என்ற ரஞ்சித்குமார் (27) கடந்த 20-3-2009 அன்று ஜோதிட நிலையத்துக்கு வந்தாராம். அப்போது, ரூ.10 ஆயிரம் கேட்டதற்கு, மீனாட்சிசுந்தரம் கொடுக்கவில்லையாம். இதையடுத்து அன்று இரவு மீனாட்சிசுந்தரத்தை கொலை செய்துவிட்டு, உடலை போர்வையால் மூடி ரஞ்சித்குமார் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கூடங்குளம் போலீஸார் வழக்குப்பதிந்து ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நசீர்அகமது, குற்றஞ்சாட்டப்பட்ட ரஞ்சித்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு வழக்குரைஞர் சிவலிங்கமுத்து ஆஜரானார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.