லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி எஸ்.பி.யின் நேர்முக உதவியாளர் கைது
காசோலை ஒன்றை விடுவிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்ட கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேர்முக உதவியாளர் நாராயணண் (55), லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.


காசோலை ஒன்றை விடுவிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்ட கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேர்முக உதவியாளர் நாராயணண் (55), லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சேலம் அயோத்யாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (27). இவர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கணினி பழுதானால் சரி செய்து தரும் பராமரிப்புப் பணி ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் செய்து கொடுத்த பணிகளின் வகையில், ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் காசோலை இவருக்கு வந்துள்ளது. அதனை விடுவிக்க, ரூ.40 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று எஸ்.பி.யில் நேர்முக உதவியாளர் நாராயணன் கேட்டாராம். இதை அடுத்து, பூபதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஞானசேகரன் தலைமையில் போலீஸார், நேரில் சென்று நாராயணன் லஞ்சம் பெற்ற போது அவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...