துபையில் இருந்து வந்த விமானத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்: மதுரையில் பரபரப்பு
துபையில் இருந்து மதுரைக்கு இன்று காலை 9.30க்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது.


துபையில் இருந்து மதுரைக்கு இன்று காலை 9.30க்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், ரூ.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது.
காலை வந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர், விமான ஊழியர்கள் விமானத்தை தூய்மைப் படுத்திக் கொண்டிருந்தபோது, கேட்பாரற்றுக் கிடந்த பையை எடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் கொடுத்தனர். அவர்கள் சுங்கத் துறை அதிகாரிகள் முன்னிலையில் சோதனையிட்ட போது, அதில், 2.5 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அவற்றைக் கைப்பற்றிய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர். இதன் மதிப்பு ரூ. 70 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...