சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதற்கு உயர்நீதிமன்றம் இடைக் காலத் தடை
சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது


சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
சென்னை விமான நிலைய ஆணைய ஊழியர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.சந்தானம் தாக்கல் செய்த மனுவில் சென்னை விமானநிலையத்தை தனியார் மயம் ஆக்கும் நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் வி.பிரகாஷ், வழக்குரைஞர் ராகவலு நாயுடு ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதுவரை, தனியார்மயமாக்குவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடைவிதித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...