தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மினிடெம்போ மீது கார் மோதி விபத்து:  ஒருவர் சாவு  6 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம்  திருக்கோவிலூர் அருகே மினிடெம்போ மீது கார் மோதியதில் ஒருவர் இறந்தார். 6 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில்

News image
Updated On :31 ஜனவரி 2014, 1:46 pm

ச.​ கார்த்​தி​கே​யன்

விழுப்புரம் மாவட்டம்  திருக்கோவிலூர் அருகே மினிடெம்போ மீது கார் மோதியதில் ஒருவர் இறந்தார். 6 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: வியாழக்கிழமை இரவு திருக்கோவிலூர் அடுத்துள்ள வடமருதூர் கிராமத்தைச் சேர்ந்த துளசி மனைவி மனோன்மணி, ராமசாமி மகன் கார்த்திக், முருகன் மனைவி சாமுண்டீஸ்வரி, சுந்தரமூர்த்தி மனைவி சரவணலட்சுமி, பிச்சக்காரன் மனைவி பூரணி, மணிக்கண்ணு மனைவி செல்வி, சுந்தரமூர்த்தி மனைவி பரணி ஆகியோர் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு மினிடெம்போவில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

 அப்போது சித்தூர்-தூத்துக்குடி இடையேயான புறவழிச்சாலையில் அமைந்துள்ள சடகட்டி கிராம எல்லையில் பாபா கோவில் அருகில் எதிரே வந்த கார் மினிடெம்போவில் மோதியது.

 இதில் மினிடெம்போவில் பயணம் செய்த துளசி மனைவி மனோன்மணி(35) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 மேலும் மினிடெம்போவில் பயணம் செய்த கார்த்திக், சாமுண்டீஸ்வரி, சரவணலட்சுமி, பூரணி, செல்வி, பரணி ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 இதுகுறித்து மணலூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.