கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரம் ஸ்ரீ நடராஜப்பெருமானுக்கு தங்க பாடாம் அணிகலன் அணிவிப்பு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய நவரத்தினங்கள் பொருத்திய தங்க பாடாம் என்ற அணிகலன் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அணிவிக்கப்பட்டது

News image
Updated On :1 ஜூலை 2014, 2:06 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய நவரத்தினங்கள் பொருத்திய தங்க பாடாம் என்ற அணிகலன் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அணிவிக்கப்பட்டது

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீ நடராஜப்பெருமானுக்கு பெயர் வெளியிட விரும்பாத  பக்தர் ஒருவர் சுமார் 140 கிராம் (17 பவுன்) தங்கத்தினாலான நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க பாடாம் (நடராஜப் பெருமான் கால்களில் அணியக்கூடிய வகையிலான அணிகலன்) என்ற அணிகலனை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

பக்தர் காணிக்கையாக வழங்கிய ரூ 5 லட்சம் மதிப்பிலான தங்க பாடாம் அணிகலனை ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவ ஏழாம் திருநாளை முன்னிட்டு (கைலாச வாஹணம்) த. துரைஸ்வாமிரத்ன தீட்சிதர், பொது தீட்சிதர்களின் செயலாளர் ஆர்.பாஸ்கர தீட்சிதரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார். இந்த தங்க பாடாம் அணிகலன் செவ்வாய்க்கிழமை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.