கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

குவிண்டால் நெல்லுக்கு ரூ 2650 வழங்க தமிழக உழவர் முன்னணி கோரிக்கை

விவசாயிகளின் வாழ்தை உயர்த்தப் போவதாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த நரேந்திரமோடி சாகுபடி செலவை கணக்கில் கொண்டு குவிண்டால் நெல்லுக்கு ரூ 2650 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என

News image
Updated On :2 ஜூலை 2014, 3:22 pm

ஜி.சுந்தரராஜன்

விவசாயிகளின் வாழ்தை உயர்த்தப் போவதாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த நரேந்திரமோடி சாகுபடி செலவை கணக்கில் கொண்டு குவிண்டால் நெல்லுக்கு ரூ 2650 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இடுபொருள் விலை உயர்வாலும், கூலி உயர்வாலும் சென்ற ஆண்டு ஆன செலவைவிட இந்த ஆண்டு ஒரு ஏக்கர் நெல் பயிரிட ரூ 1800 வரை கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு சராசரி விளைச்சல் 18 குவிண்டால் நெல் என எடுத்துக் கொண்டாலும் ரூ.100 அதிகம் செலவாகிறது. ஆனால் மத்தியஅரசோ குவிண்டாலுக்கு ரூ50 மட்டுமே உயர்த்தியுள்ளது விவசாயிகளை மிகவும் பாதிப்படையச் செய்யும். சாகுபடி செலவை கணக்கிட்டு எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கக் கோரி தமிழக உழவர் முன்னணி போராடுகிறது. எனவே குவிண்டால் நெல்லுக்கு ரூ.2650 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அறிக்கையில் சி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.