கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரத்தில் ஸ்ரீமாணிக்காவசகர் குருபூஜை: திரளான சிவனடியார்கள் பங்கேற்பு

சிதம்பரம் வேங்கான்தெரு திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீமந் ஆத்மநாதர் கோயிலில் ஸ்ரீமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான

News image
Updated On :2 ஜூலை 2014, 11:53 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் வேங்கான்தெரு திருபாற்கடல் மடத்தில் அமைந்துள்ள ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீமந் ஆத்மநாதர் கோயிலில் ஸ்ரீமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான சிவனடியார்கள் குருபூஜையில் பங்கேற்று திருவாசகம் முற்றோதல் செய்து வழிபட்டனர்.

இந்த இடம் சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீமாணிக்காவசக பெருமான் திருவாசகம் சொல்ல நடராஜப்பெருமான் தன் கைப்பட எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க கோயிலாகும். முன்னதாக சிவபூஜை வழிபாடு மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாணிக்கவாசகர் மற்றும் ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீமந் ஆத்மநாதர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிச்சித்தனர். பின்னர் வடக்குவீதி நடராஜ க்ருபா மண்டபத்தில் மாகேஸ்வரபூஜையும், அன்னதானமும் நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி வை.பசவராஜ், சு.சங்கரநடராஜ தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.