இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

நடராஜர் கோயில் முத்துப்பல்லக்கு உள்பிரகாரத்திலேயே வலம் வந்தது

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூன் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 3-ம்தேதி தேர்த் திருவிழாவும், 4-ம் தேதி தரிசனமும்

News image
Updated On :6 ஜூலை 2014, 2:49 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு சனிக்கிழமை இரவு நடைபெற்ற முத்துப்பல்லக்கு கோயில் உள்பிரகாரத்திலேயே வலம் வந்து முடிவுற்றது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூன் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 3-ம்தேதி தேர்த் திருவிழாவும், 4-ம் தேதி தரிசனமும் நடைபெற்றது. 5-ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு வீதிஉலாவிற்கு பல்லக்கு அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு ஜோடிக்கப்பட்டது.

வீதிகள் மற்றும் கோயில் சன்னதிகளில் வசிப்பவர்கள் யாராவது இறந்துவிட்டால், அவர்கள் உடல் உடனடியாக எடுக்கப்பட்டு 4 வீதிகளில் தீட்டு கழிக்கப்பட்ட பின்னர்தான் உற்சவ காலங்களில் சுவாமி வீதி உலா வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை வடக்குசன்னதியில் முதியவர் ஒருவர் இறந்துவிட்டார். அவரது மகன்கள் வெளி மாநிலங்களில் உள்ளதால் வர தாமதம் ஆகும் என்பதால் உடலை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து பொதுதீட்சிதர்கள் முத்துப்பல்லக்கை கோயில் உள்பிரகாரத்திற்கு கொண்டு சென்று சுவாமிகள் எழுந்தருளச் செய்து வீதிவலம் நடத்தாமல், கோயில் உள்பிரகாரத்திலேயே வலம் வந்து விழா நடத்தி முடித்தனர். முத்துப்பல்லக்கு வீதிவலம் வருவது தடைபட்டது இதுவே முதல்முறையாகும் என சிவனடியார் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.