விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சக மாணவனின் உயிரை காக்க களமிறங்கிய கல்லூரி மாணவிகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் உயிர் காக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை சுரண்டை அரசு கல்லூரி மாணவிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

News image
Updated On :7 ஜூலை 2014, 7:49 am

ஷேக் அப்துல்காதர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் உயிர் காக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை சுரண்டை அரசு கல்லூரி மாணவிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், ராஜபாண்டி கிராமத்தை சேர்ந்த பி. சொக்கலிங்கபாண்டியன் (19). இவர் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இம்மாணவனின் மூளையில் புற்றுநோய் தாக்கியதில் மிகவும் பாதிக்கப்பட்டான். சிகிச்சைக்காக சென்னையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையில் மாணவன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

தங்களுடன் பயிலும் மாணவன் சொக்கலிங்கபாண்டியன், மருத்துவமனையில் உயர் சிகிச்சை பெறுவதற்கு போதிய நிதி இல்லாத நிலையில் மாணவனின் குடும்பம் மிகவும் தவித்து வருகிறது. ஆகவே தமிழக அரசு மாணவனின் உயர் சிகிச்சைக்கு நிதி அளித்து உயிரைக் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர், மாணவிகள் 50 க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.