விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு  விண்ணப்பம் விநியோகம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2014, 8:42 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையில் பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பார்மசிஸ்ட், பிபிடி பார்ம், பிஎஸ்சி ரேடியோலாஜி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான 2014-15 ஆம் ஆண்டிக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. 

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டீன் (பொறுப்பு) திருமணிபாண்டியன் விண்ணப்பம் விநியோகத்தை தொடங்கி வைத்தார். நிர்வாக அலுவலர் செல்லப்பா மற்றும் மருத்துவக் கல்லூரி பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாணவர்கள் விண்ணப்பம் பெற்று சென்றனர்.

எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்கள் தங்களது சாதிச் சான்று ஆவணத்தை சமர்ப்பித்து விண்ணப்பத்தை இலவசமாகவும், பொதுப்பிரிவினர் ரூ. 350 க்கான டிமாண்ட் டிராப்ட் செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு முதல் கட்டமாக 1,300 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் தேர்வுக்குழு முன்னிலையில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.