நெல்லை அருகே இளைஞர் கொலை: மறியல், கடையடைப்பு, போலீஸ் குவிப்பு
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் பழிக்குப் பழியாக புதன்கிழமை இளைஞரை விரட்டி சென்று வெட்டிக் கொலை செய்தனர். உடலை தர மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு கடைகள் அடைக்கப்பட்டதை அடுத்து பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு எஸ்.பி. தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.








