இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் அருகே எம்ஜிஆர் திட்டில் அரை நிர்வாண நிலையில் பள்ளி மாணவி சடலம்

சிதம்பரம் அருகே கிள்ளையில் கடலோர உப்பனாற்று பகுதியில் எம்ஜிஆர் திட்டு தீவாக உள்ளது. சுனாமி பேரலை அழிவிற்கு பின்னர் அங்கு யாரும் தற்போது வசிக்கவில்லை. தற்போது சுற்றுலா வருபவர்கள் தனியார்

News image
Updated On :10 ஜூலை 2014, 2:29 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே கிள்ளை எம்ஜிஆர் திட்டில் அரை நிர்வாண நிலையில் பள்ளி மாணவி சடலம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே கிள்ளையில் கடலோர பகுதியில் புதிய எம்ஜிஆர் திட்டுக்கும், பொன்னந்திட்டுக்கும் நடுவில் கால்வாய் ஓரம் வியாழக்கிழமை மாலை அரசு பள்ளி சீருடையுடன், அரை நிர்வாண நிலையில் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி சடலம் கிடந்துள்ளது. உடலுக்கு அருகாமையில் ஸ்கூல் பை உள்ளது. பையில் சீருடை அல்லாத சாதாரண கலர் உடையும், பேஸ்ட், பிரஷ், ரப்பர் ஆகியவை இருந்துள்ளது. ரப்பரில் செல்வி, 10-ம் வகுப்பு என எழுதப்பட்டுள்ளது. இறந்து கிடந்த மாணவி யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இறந்து போன மாணவி விடுதியில் தங்கி படிக்கும் மாணவியாக இருக்கலாம் என போலீஸார் அனைத்து விடுதிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த போன மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், மற்றும் கிள்ளை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.