ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மம்சை பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் ரா.அலுசோடை தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :13 ஜூலை 2014, 7:58 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் ரா.அலுசோடை தலைமையில் நடைபெற்றது.

பள்ளிச் செயலாளர் செ.ஜெயச்சந்திரன், உறவின்முறைத் தலைவர் ரா.தவமணி நாடார், பள்ளித் தலைவர் அ.பெரியசாமி, உறவின் முறை செயலாளர் து.பன்னீர்செல்வம், பொருளாளர் அ.செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

பள்ளி மாணவர்கள் 170 பேருக்கு அரசின் விலையில்லா மடிக்கணிகளை வழங்கி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன் மற்றும் பேரூராட்சி துணைத் தலைவரும் அரசு வழக்குரைஞருமான ப.அய்யனார் ஆகியோர் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவின் முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.