நெல்லையில் தாமிரவருணி நதியை பாதுகாக்க வலியுறுத்தி நூதனப் போராட்டம்
தாமிரவருணி நதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி சிந்துபூந்துறையில் நதியில் சாக்கடை கலக்கும் இடத்தில் அமர்ந்து இந்து மகா சபா சபையின் மாநில துணைத் தலைவர் திடீர்


தாமிரவருணி நதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி சிந்துபூந்துறையில் நதியில் சாக்கடை கலக்கும் இடத்தில் அமர்ந்து இந்து மகா சபா சபையின் மாநில துணைத் தலைவர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாமிரவருணி நதி மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலையில் பூங்குளத்தில் உற்பத்தி ஆகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்து கடலில் கலக்கிறது. வற்றாத ஜீவநதியான தாமிரவருணியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், குடியிருப்புகள் வணிக வளாகங்கள் போன்ற கட்டடங்கள், நதிக்கரையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகள், கழிவறைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் கலக்கிறது.பேருந்து, லாரி, வேன், ஆட்டோ போன்ற வாகனங்களை கழுவுவதால் தாமிரவருணி நதி நீர் மாசுபடுகிறது. நதிக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் நதியில் கலக்கிறது. பல்வேறு வகையில் மாசுபடும் தாமிரவருணி நதியை பாதுகாக்க வேண்டும்.
நதிக்கரையில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கழிவு நீர் கலப்பதை தடை செய்ய வேண்டும். மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி்க்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையில் பிள்ளையார் படித்துறை அருகில் கழிவுநீர் சாக்கடை சங்கமிக்கும் இடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அகில பாரத இந்து மகா சபை அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் வண்ணை கேப்டன்கணேசன் அறிவித்திருந்தார்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை சிந்துபூந்துறையில் நதியில் சாக்கடையில் அமர்ந்து வண்ணைகணேசன் தனது போராட்டத்தை தொடங்கினார். மாநகர காவல் ஆய்வாளர் ரகுபதிராஜா தலைமையில் போலீஸார் கணேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர் போராட்டத்தை விலக்கி கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...