இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரத்தில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்து: 3 வீடுகள், 2 கடைகள் எரிந்து சாம்பல்

சிதம்பரம் ஓமக்குளத்தில் வள்ளி என்பவரது வீட்டில் இருந்த 2 கேஸ் சிலிண்டர்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து வீடு தீப்பிடித்தது. தீ பரவி அருகாமையில் இருந்த அஞ்சலி, பத்மாவதி ஆகியோரது

News image
Updated On :14 ஜூலை 2014, 12:05 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் வீடு ஒன்றில் திங்கள்கிழமை பிற்பகல் இரு கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் தீப்பிடித்து 3 வீடுகள், 2 கடைகள் எரிந்து சாம்பலாயின.

சிதம்பரம் ஓமக்குளத்தில் வள்ளி என்பவரது வீட்டில் இருந்த 2 கேஸ் சிலிண்டர்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து வீடு தீப்பிடித்தது. தீ பரவி அருகாமையில் இருந்த அஞ்சலி, பத்மாவதி ஆகியோரது வீடுகளும், முருகவேல் என்பவரது மரக்கடை, அண்ணதுரை என்பவரது கடை ஆகியவை தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த நிலையஅலுவலர் முகமதுஜகாங்கீர் தலைமையில் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர். தீவிபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமுற்றதாக கூறப்படுகிறது. தீவிபத்து குறித்து சிதம்பரம் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகவல் அறிந்த சிதம்பரம் வருவாய் ஆய்வாளர் அசோகன், கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி, நகரமன்ற உறுப்பினர் முகமது ஜியாவுதீன், பால் வளத்தலைவர் சி.கே.சுரேஷ்பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அரசு நிவாரண உதவிகளான அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.