பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லையில் மடிக்கணினி கோரி மாணவர்கள் முற்றுகை, மறியலால் பரபரப்பு

திருநெல்வேலியில் திங்கள்கிழமை விலையில்லா மடிக்கணினி, கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் முற்றுகை, ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து

News image
Updated On :14 ஜூலை 2014, 10:36 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் திங்கள்கிழமை விலையில்லா மடிக்கணினி, கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் முற்றுகை, ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மறியலில்  ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பிரிவில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆங்கில வழியில் கற்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காத காரணத்தால் மாணவர்கள் சாலைக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மேலப்பாளையம் ரஹ்மானியா மேல்நிலைப் பள்ளி, சிவகிரி சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளி, விக்கிரமசிங்கபுரம் சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் திரண்டு தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீமந்திரமூர்த்தி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.பி. முருகேசன், மாவட்ட துணைச் செயலர் விஜயகுமார், மாவட்டக்குழு நிர்வாகி மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதனிடையே திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு மடிக்கணினி, கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்க திரண்டனர்.

தொடர்ந்து களக்காடு அருகே இடையன்குளம் அமீர்ஜமால் மேல்நிலைப் பள்ளி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி, நல்லூர் மேற்கு மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை குழந்தை ஏசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.மூன்றடைப்பில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் தங்களிடம் கல்லூரி நிர்வாகம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். மேல்நிலைப் பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கு அரசு மடிக்கணினி வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போலீஸார் திணறல்:

இந்நிலையில் பல்வேறு பள்ளிகளில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வந்திருந்த 200 க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் திடீரென கொக்கிரகுளத்தில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மாணவர்களும் பங்கேற்றதால்  போலீஸார் திணறினர்.

மாணவர்களின் திடீர் மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கொக்கிரகுளத்தில் இருந்து வண்ணார்பேட்டை மேம்பாலம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. போக்குவரத்தை சீரமைக்க போலீஸார் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.