ஊர் பெயர் மாற்றம் பிரச்னை: நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
வள்ளியூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிக்கு ஊர் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்னையில் புதன்கிழமை சிதம்பராபுரம் கிராம மக்கள் திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.










