இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரத்தில் தீவிபத்து: வீடு மற்றும் வெல்டிங் ஒர்க்க்ஷாப் எரிந்து சேதம்

சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு செல்வம் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஒர்க்க்ஷாப் திடீரென தீப்பிடித்தது. தீ மேலும் பரவி அருகாமையில் இருந்த ரத்தினசாமி என்பவரது வீடும் எரிந்து

News image
Updated On :20 ஜூலை 2014, 12:33 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் வீடு மற்றும் வெல்டிங் ஒர்க்க்ஷாப் முற்றிலும் எரிந்து சேதமுற்றது.

சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு செல்வம் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஒர்க்க்ஷாப் திடீரென தீப்பிடித்தது. தீ மேலும் பரவி அருகாமையில் இருந்த ரத்தினசாமி என்பவரது வீடும் எரிந்து சேதமுற்றது. தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். தீவிபத்தில் ரத்தினசாமி என்பவரது வீட்டில் 2 பவுன் நகைகள், மேலும் அவரது மகள்கள் ரஞ்சிதம், ரோஜா ஆகியோரின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்ற சான்றிதழ்களும் எரிந்து சேதமுற்றன. தீ விபத்தின் மொத்த சேத மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.