இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

அண்ணாமலைப் பல்கலையில் 1985-89ல் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் 1985-89 கல்வி ஆண்டில் 350 மாணவ, மாணவியர்கள் பயின்று முடித்தனர். இதில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் 180 மாணவ, மாணவியர்கள்

News image
Updated On :21 ஜூலை 2014, 10:15 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் 1985-89 கல்வி ஆண்டில் பயின்று முடித்து 25 ஆண்டுகள் நிறைவுற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் 1985-89 கல்வி ஆண்டில் 350 மாணவ, மாணவியர்கள் பயின்று முடித்தனர். இதில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் 180 மாணவ, மாணவியர்கள் குடும்பத்தினருடன் சனிக்கிழமை மகாபலிபுரத்தில் கூடி தங்கள் கல்லூரி கால நிகழ்வுகளை ஒருவருக்கு, ஒருவர் பகிர்ந்து கொண்டனர். இதில் சிங்கப்பூர், கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் மாணவ, மாணவியர்கள் அடங்குவர்.

பல்கலைக்கழக பொறியியல் புல ஆம்டெக் ஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பொறியியல் புல முதல்வர் டி.வேலுசாமி தலைமை வகித்துப் பேசினார். பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், தேர்வு கட்டுப்பாட்டி அதிகாரியுமான ஏ.ரகுபதி வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா பங்கேற்று சிறப்புரையாற்றினார். பத்திரிகையாளர் சுதாங்கன் வாழ்த்துரையாற்றினார். பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களான யூஎஸ் முரளிபதி, தெற்குஆசிய உலக வங்கியில் பணியாற்றும் பியூஸ்டோக்ரா, சிங்கப்பூர் பாலநாகேந்திரராவ், சென்னை ஷாஜகான்சையத், கத்தார் கிருஷ்ணகுமார், ஏரிஸ் இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகி சி.டி.அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

விழாவில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பல்கலைக்கழகத்திற்கு ரூ.1.50 லட்சம் நிதி காசோலையாக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவிடம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.