ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லையில் தொமுச தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியில் திமுக சார்பு

News image
Updated On :22 ஜூலை 2014, 10:18 am

ஷேக் அப்துல்காதர்

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியில் திமுக சார்பு அமைப்பான தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த நிலையில் இன்னமும் பேச்சுவார்த்தையை தொடங்க வில்லை. உடனடியாக ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவை உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலே பணப்பலன்கள் வழங்க வேண்டும். அரசு பேருந்துகளுக்கு தனியார் பல்க்களில் எரிபொருள் நிரப்புவதை கைவிட வேண்டும்.  அரசுப் போக்குவரத்துக் கழகத்தை 40 சதவீதம் தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரியங்களை அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சார்பு அமைப்பான தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை புறவழிச்சாலை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச செயலர் ஆ. தர்மன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் இரா. முருகேசன், மின்க்கழக தொமுச பொதுச்செயலர் நடராஜன், கோட்டச் செயலர் ராஜூ, மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் மு. அப்துல்வஹாப், மாவட்ட மாணவரணி செயலர் பா. அருண்குமார், மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி செயலர் எஸ்.வி. சுரேஷ், மானூர் ஒன்றிய செயலர் ஆ.க. மணி, பேச்சாளர் நெல்லைரவி உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.