அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் : பழங்குடியினரிடம் இருந்து வாகன கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் 50 சதவீதம் மானியத்தில் மானியக் கடன் பெற மலைவாழ் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Updated On :25 ஜூலை 2014, 12:10 pm

விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் 50 சதவீதம் மானியத்தில் மானியக் கடன் பெற மலைவாழ் மற்றும் பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு: தாட்கோ மூலம் இளைஞர்கள் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தில் பல்வேறு வகையான கடன்கள்  மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் மலைப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினருக்கு அத்தியவாசிய பொருள்களை இடையூறு இல்லாமல் விநியோகம் செய்யும் வகையிலும், நகரும் நியாய விலைக்கடைகளுக்கு பொருள்கள் எடுத்து செல்லவும், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சுயவேலைப்பு அளிக்கும் வகையில் ரூ.11 லட்சம் வரையில் வாகனக் கடன் 50 சதவீதம் மானியத்தில் அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் கடன் பெறுவதற்கு குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம் ஆகும். வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதிற்குள்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தவாரகவும், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.

அதை பூர்த்தி செய்து உடன் குடும்ப அட்டை நகல், வட்டாட்சியர் கையொப்பம் இட்ட இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், இரண்டு புகைப்படம், ஓட்டுநர் உரிமம், வாகன விலைப்புள்ளி விவரம் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள் ஆகியவைகளை இணைத்து மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் இம்மாத இறுதிக்குள் நேரில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தகுதியான பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.