விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில், திருஆடிப்பூர பெருவிழாவின் ஐந்தாம் திருநாளான சனிக்கிழமை இரவு ஐந்து கெருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீஆண்டாள் சன்னதி முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் திருக்கோவில் ஆஸ்தான வித்வான் நடராஜ கம்பர் குழுவினரின் சிறப்பு நாதஸ்வரம் நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. ஸ்ரீஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீசுந்தரராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன் ஆகிய எம்பெருமான்கள் பெரிய திருவடி (கெருட) வாகனங்களிலும், ஸ்ரீபெரியாழ்வார் சிறய அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர். அப்போது ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


