பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

புதுச்சேரியில் ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்: ஐ.ஜி. பிரவீர் ரஞ்சன்

புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என காவல்துறை  தலைவர் (ஐ.ஜி.) பிரவீர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜூலை 2014, 10:31 am

சுஜித்குமார்

புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என காவல்துறை  தலைவர் (ஐ.ஜி.) பிரவீர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி டிஜிபியாக இருந்த ஆர்.காமராஜ் தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.ஏற்கெனவே ஐ.ஜி ஆக இருந்த பிரவீர் ரஞ்சன் புதுச்சேரி காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பாதுகாப்பான நகரம் புதுச்சேரி என்ற நிலையை ஏற்படுத்த காவல்துறை உறுதி பூண்டுள்ளது. புதுவையில் கடந்த ஓராண்டாக சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.

காவல்துறையின் செயல்பாடுகளும் திருப்திகரமாக உள்ளது. பொதுமக்களிடம் மனிதநேயம், அன்புடன் பழக போலீஸôருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எளிதில் அணுகும் வகையில் போலீஸôர் நடந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லை. மீறும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹெல்மெட் அணிய ஏற்பாடு

இந்தியா முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல் புதுவையிலும் கட்டாயமாக ஹெல்மெட்

அணியச் செய்வது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இதனால் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை பெருமளவு குறையும்.ஹெல்மெட் அணிவதின் சாதகங்கள், பயன்குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.