வேங்கான்தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட திருப்பாற்கடல் தீர்த்த குளம் மொத்த 6647 சதுர மீட்டராகும். மேலும் குளத்தில் அருகாமையில் ஆத்மநாதர்கோயில், குருநமச்சிவாயர் கோயில் உள்ளது. தற்போது கோயில் குளம் முற்றிலுமாக ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு, இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீர்த்தகுளத்தை படிக்கட்டுகளை சீரமைத்து, நீர் வரும் பாதையை சீர் செய்து, சுவாமி சுற்றி வருமாறு பாதை அமைத்து திருப்பணி செய்யப்படவுள்ளது. திருப்பணிக்கான பூமிபூஜை ஜூன் 4-ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.