தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஜூன் 4-ல் திருப்பாற்கடல் திருப்பணிக்கான பூமிபூஜை: 4 ஆதீனங்கள் பங்கேற்பு

சிதம்பரம் வேங்கான்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீநடராஜர் கோயில் தீர்த்த குளங்களில் ஒன்றான திருப்பாற்கடல் தீர்த்த குளம் திருப்பணி மேற்கொள்ள பூமிபூஜை ஜூன் 4-ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30

News image
Updated On :1 ஜூன் 2014, 1:51 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் வேங்கான்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீநடராஜர் கோயில் தீர்த்த குளங்களில் ஒன்றான திருப்பாற்கடல் தீர்த்த குளம் திருப்பணி மேற்கொள்ள பூமிபூஜை ஜூன் 4-ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமான் உருவாக்கியது திருப்பாற்கடல் குளம் என வரலாறு கூறுகிறது. இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போய் இருந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் இந்த ஆண்டு மீட்கப்பட்ட பகுதி மட்டும் சுத்தம் செய்யப்பட்டு நீர்விடப்பட்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமே ஸ்ரீமந் நடராஜப் பெருமானின் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது.

வேங்கான்தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட திருப்பாற்கடல் தீர்த்த குளம் மொத்த 6647 சதுர மீட்டராகும். மேலும் குளத்தில் அருகாமையில் ஆத்மநாதர்கோயில், குருநமச்சிவாயர் கோயில் உள்ளது. தற்போது கோயில் குளம் முற்றிலுமாக ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு, இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீர்த்தகுளத்தை படிக்கட்டுகளை சீரமைத்து, நீர் வரும் பாதையை சீர் செய்து, சுவாமி சுற்றி வருமாறு பாதை அமைத்து திருப்பணி செய்யப்படவுள்ளது. திருப்பணிக்கான பூமிபூஜை ஜூன் 4-ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

பூமிபூஜையில் தரும்புரம் ஆதீரனம் சண்முக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், திருப்பணந்தாள் ஸ்ரீகாசிமடம் ஸ்ரீமுத்துக்குமாரசாமி தம்பிரான், சிதம்பரம் மெளன மட அதிபர் ஸ்ரீமெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் பங்கேற்று ஆசியுரை வழங்குகின்றனர். விழா ஏற்பாடுகளை திகுப்பணிக்குழுத் தலைவர் எம்.செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.