ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம், தம்பிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியில் தம்பிபட்டி, மாவூத்து சாலையில் உள்ள சடையாண்டி என்பவரின் 14 வயது மகள் தற்போது 8-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் 6-ம் வகுப்பு படிக்கும் போது இப் பள்ளிக்கு இடைநிலை ஆசிரியப் பயிற்சி எடுப்பதற்காக டி.கிருஷ்ணாபுரம், மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் சந்திரசேகர் (24) என்பவர் தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்றுள்ளார்.