ஸ்ரீவிலி. ஸ்ரீவடபத்ரசயன பெருமாள் கோயிலுக்கு ரூ.20 லட்சத்தில் புதிய கொடிமரம்
ஸ்ரீ ஆண்டாள் கோயிலுடன் இணைந்த, ஸ்ரீவடபத்ர சயனர் திருக்கோயில் கோபுரமே, தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ளது. இக்கோயிலின் கொடி மரம் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவடபத்ரசயன பெருமாள் கோயிலுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய கொடிமரம் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ ஆண்டாள் கோயிலுடன் இணைந்த, ஸ்ரீவடபத்ர சயனர் திருக்கோயில் கோபுரமே, தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ளது. இக்கோயிலின் கொடி மரம் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது சேதமுறும் நிலையில் இருந்தது. இதனை அப்புறப்பபடுத்திவிட்டு, புதிய கொடி மரத்தை உபயதாரர் மூலம் அமைக்க கோயில் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது.
திருப்பூர், அமர்ஜோதி தொழில் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் தொழிலதிபர் டி.ஏ.கல்பஜா பிரேம்சந்தா், இக் கொடி மரத்தை அமைத்துத்தர முன்வந்தார். இதனையடுத்து செங்கோட்டையிலிருந்து வனத்துறையின் ஒப்புதலுடன் மதிப்புள்ள 50 அடி உயரமுள்ள தேக்கு மரம் வாங்கப்பட்டு, கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, வேலைகள் கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கியது. தற்போது கொடி மரத்தின் வேலைகள் நிறைவு பெற்றுள்ளது.இந்த கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் கோயில் ஸ்தானிகம் ரங்கராஜன் (எ) ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் கொடிமரம் நாட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இது குறித்து தொழிலதிபர் டி.ஏ.கல்பஜா பிரேம்சந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த கொடி மரத்திற்கு காப்பர் தகடு அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார். நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...