பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் அரசு மகளிர் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவியர் களுக்கு கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ பாராட்டு

சிதம்பரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

News image
Updated On :2 ஜூன் 2014, 1:45 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

சிதம்பரத்தில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ்டூ பொதுத்தேர்வில் மாணவி திவ்யபாரதி 1148 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி காயத்ரி 1146 மதிப்பெண்களும், மாணவி ஆதித்யா 1095 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடங்களை பிடித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி தாரணி 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் நான்காம் இடத்தை பெற்றுள்ளார். ஹேமாம்புஜவள்ளி 494 மதிப்பெண்களும், மாணவி சௌம்யா 494 மதிப்பெண்களும், அபிநயா 492 மதிப்பெண்களும், ஜெயஸ்ரீ 492 மதிப்பெண்களும் பெற்று பள்ளியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர்.

இதனை அறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளான திங்கள்கிழமை பள்ளியில் நடைபெற்ற இறைவணக்க நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவியர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்தார். சிறப்பிடம் பெற்ற மாணவியர்களுக்கு பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதே போன்று சிதம்பரத்தில் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்பட்டு வரும் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இதுவரை இல்லாத அளவிற்கு கடலூர் மாவட்டத்திலேயே ஆதிதிராவிட நல பள்ளிகளில் 93 சதவீத தேர்ச்சி பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. இதனை முன்னிட்டு கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை அப்பள்ளிக்கு சென்று தேர்ச்சி விகிதத்தை அதிகரித்த தலைமைஆசிரியர் அனந்தகிருஷ்ணன் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து பாராட்டினார்.  எம்எல்ஏவுடன் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் பி.ஜான்சிராணி, மாவட்ட செயற்க்குழு உறுப்பினர்கள் பி.கற்பனைச்செல்வம், எஸ்.ஜி.ரமேஷ்பாபு ஆகியோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.