பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி

சிதம்பரம் அருகே மூன்று வயது சிறுமியை, கூலித்தொழிலாளி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். தகவல் ஊர்மக்களுக்கு தெரிந்ததால், கூலித்தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலைக்கு

News image
Updated On :3 ஜூன் 2014, 1:20 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே மூன்று வயது சிறுமியை, கூலித்தொழிலாளி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். தகவல் ஊர்மக்களுக்கு தெரிந்ததால், கூலித்தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றி புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்பவரது 3 வயது மகள். இவள் செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அதே ஊரில் தெற்குதெருவில் வசிக்கும் லோடுமேன் ரவிச்சந்திரன் (45) அச்சிறுமியை அருகாமையில் மறைவான இடத்திர்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்திலிருந்த மக்கள் சிறுமியை மீட்டுள்ளனர். இதனால் அங்கிருந்து தலைமறைவான ரவிச்சந்திரன், ஊர் மக்களுக்கு தெரிந்துவிட்டதே என்பதால், வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அருகாமையிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்ரமர் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் சத்தியா கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.