தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் நகரில் தொடரும் மின்வெட்டு! மக்கள் அவதி

காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகரித்துள்ளதால் ஜூன் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் மின்வெட்டு அறவே நீக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் சிதம்பரம் நகரில் ஜூன் 1-ம் தேதி பல்வேறு

News image
Updated On :3 ஜூன் 2014, 1:23 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் ஜூன் 1-ம் தேதி முதல் சுமார் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகரித்துள்ளதால் ஜூன் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் மின்வெட்டு அறவே நீக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் சிதம்பரம் நகரில் ஜூன் 1-ம் தேதி பல்வேறு காரணங்களை காட்டி சுமார் 5 மணி நேரம் மின்வெட்டு செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்று தினங்களாக சுமார் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை மின்வெட்டு செய்யப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால், குறைந்த மின்சாரம் வருவதால், மூன்று மணி நேரம் மின்சப்ளை நிறுத்தச்சொல்லி பவர் கிரீட்டிலிருந்து தகவல் வந்ததால் மின்சப்ளை நிறுத்தப்பட்டது என தெரிவிக்கின்றனர். கடும் வெயில் அவதியில், மின்வெட்டும் சேர்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக கடும் வெயிலில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மின்வெட்டினாலும், கடும் வெயிலினாலும் பள்ளி மாணவ, மாணவியர்கள் மயக்கம் அடைந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.