பூமிபூஜையில் திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமட அதிபர் ஸ்ரீமுத்துக்குமாரசாமி தம்பிரான் பங்கேற்று முதல்கல்லை எடுத்துக் கொடுத்தார். சிதம்பரம் மெளன மட அதிபர் ஸ்ரீமெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாழ்த்துரையாற்றினார். விழாவில் திருப்பணிச்செல்வர் எம்.ராமலிங்கம் செட்டியார், தில்லைத் திருமுறை மன்ற அமைப்பாளர் வி.முருகையன், குருஞான சம்பந்தர் பள்ளி தாளாளர் சேதுசுப்பிரமணியன், சக்தி ஆர்.நடராஜன், ரோட்டரி சங்கத் தலைவர் எல்.சீனுவாசன், முத்துகணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத் தலைவர் எம்.செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.