தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம்: ஜூன் 25-ல் தொடக்கம்

உற்சவ விபரம் வருமாறு: ஜூன் 26- வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 27-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 28-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 29-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா

News image
Updated On :5 ஜூன் 2014, 2:10 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் ஜூன் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

உற்சவ விபரம் வருமாறு: ஜூன் 26- வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 27-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 28-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 29-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 30-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, ஜூலை 1-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, ஜூலை 2-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

ஜூலை 3-ம் தேதி (வியாழக்கிழமை) தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை.4-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்ச தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜூலை.5-ம் தேதி சனிக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.