தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு தாமதமின்றி டிஜிட்டல் உரிமம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் தாமதமின்றி விரைவாக வழங்க வேண்டும் என்று  தகவல்&ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு

News image
Updated On :5 ஜூன் 2014, 10:35 am

வேல்முருகன்

தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் தாமதமின்றி விரைவாக வழங்க வேண்டும் என்று  தகவல்&ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். 

இந்த கடிதத்தில் டிஜிட்டல் உரிமம் பெற அரசு கேபிளுக்கு சட்டப்படி முழு தகுதி உள்ளது என்றும், டிஜிட்டல் உரிமம் தரப்பட்டால்தான் ஏழை, நடுத்தர மக்கள் தரமான கேபிள் சேவை பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்  கடந்த 2012 ஆம ஆண்டே டிஜிட்டல் உரிமம்கோரி  மத்திய அரசிடம் தமிழக அரசு கேபிள் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது,

 ஆனால் அதற்கு பின்பு விண்ணப்பித்த விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர, கடித்தத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 கடந்த முறை ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தமிழக அரசு கேபிள் நிறுவத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.