தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் ரெளடி மர்ம சாவு: தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வழக்குப் பதிவு

சிதம்பரம் அண்ணாமலைநகரில் ரெளடி மண்ரோடு கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்த வழக்கில், தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப்

News image
Updated On :7 ஜூன் 2014, 12:55 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் ரெளடி மண்ரோடு கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்த வழக்கில், தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் சிவபுரி மெயின்ரோட்டு பகுதியில் உள்ள மண்ரோட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஹரி (36). பிரபல ரெளடியான இவர் வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டின் வெளி வராண்டாவில் கழுத்து அறுபட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரது தந்தை பாலகிருஷ்ணன் தனது மகன் ஹரி, மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார் என அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் தற்கொலை என வழக்குப் பதிந்து, உடலை பிரேத பரிசோதனை செய்து, அவரது தந்தையிடம் சனிக்கிழமை மாலை ஒப்படைத்தனர்.

இறந்து போன ஹரி மீது சிதம்பரம் காவல் கோட்டத்தில் 3 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 18 வழக்குகள் உள்ளன. ஹரியின் மனைவி மதுமிதா (30) கடந்த 2 மாதம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறபப்டுகிறது. இவருக்கு கேஷிகா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.