கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட கார் விற்பனையாளர்

கார் விற்பனையாளர் ஒருவர், தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :13 ஜூன் 2014, 12:19 pm

ஜபலின் ஜான்

கார் விற்பனையாளர் ஒருவர், தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஈரோடு வீரப்பன்சத்திரம் சிதம்பரநார் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (35). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடன் தாய் காளியம்மாளும் வசித்து வந்தார். அவருக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்து வந்ததாம்.

 ஆறுமுகம் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவிரக்தியில் இருந்து வந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தனது மனைவி மற்றும் குழந்தைகளை சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள ஒரு கோவிலுக்கு அனுப்பினார்.

 மனவிரக்தியில் இருந்த ஆறுமுகம், தாய் காளியம்மாளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாராம்.

தகவல் அறிந்த வீரப்பன்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காளியம்மள், ஆறுமுகம் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.