கூமாப்பட்டி, ராமசாமிபுரம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (49). இவர் அ.தி.மு.க. கிளைச் செயலாளராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் உள்ளார். வியாழக்கிழமை இதே இடத்தைச் சேர்ந்த செ.தங்கப்பாண்டி, செ.சந்திரபோஸ் ஆகியோர் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பகுதியில் இருந்த நாகராஜ் என்பவரின் ஆட்டோவில் உட்கார்ந்து மது குடித்துவிட்டு, அதில் வாந்தி எடுத்துள்ளார்கள். இதனை ராமச்சந்திரன் கண்டித்துள்ளார். இதனையடுத்து இருவரும் அவரை அடித்துள்ளார்கள். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் செய்யச் சென்றுள்ளார். இதில் ஒருவரை போலீஸார் பிடித்து காவல் நிலையத்தில் வைத்திருந்துள்ளார்கள்.