கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

ஜூலை 1-ம் தேதி முதல் திருப்பதி மற்றும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சிதம்பரத்தில் நிற்காது என அறிவிப்பு

ராமேஸ்வரம்- திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் புவனேஸ்வர்- ராமேஸ்வர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ஜூலை 1-ம் தேதி சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாது என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சிதம்பரம் பகுதி மக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

News image
Updated On :15 ஜூன் 2014, 6:53 am

ஜி.சுந்தரராஜன்

ராமேஸ்வரம்- திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் புவனேஸ்வர்- ராமேஸ்வர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ஜூலை 1-ம் தேதி சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாது என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சிதம்பரம் பகுதி மக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

சிதம்பரம் வழியாக திருப்பதி-ராமேஸ்வரம் (16779) எக்ஸ்பிரஸ் ரயில், ராமேஸ்வரம்-திருப்பதி (16780) ஆகிய ரயில்கள் சிதம்பரம் வழியாக வாரம் வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய தினங்களில் செல்கிறது. இதுநாள் வரை மேற்கண்ட ரயில்கள் சிதம்பரத்தில் நின்று சென்று வருகிறது. இந்நிலையில் குறைந்த பயணிகள் ஏறுவதாக கூறி வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் மேற்கண்ட ரயில்கள் சிதம்பரத்தில் நிறுத்தப்படாது என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதால் சிதம்பரம் பகுதி மக்கள் பெரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

அதேபோன்று சிதம்பரம் வழியாக ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வர் செல்லும் ரயிலும் (18496), சனிக்கிழமை ராமேஸ்வரம் செல்லும் ரயிலும் (18495) வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயில் நகரமும், சுற்றுலா நகரமுமான சிதம்பரம் ரயில்நிலையத்தில் இதுவரை நிறுத்தப்பட்டு வந்த மேற்கண்ட ரயில்கள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளதால், சிதம்பரம் சுற்றுப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடும் அதிருப்திஅடைந்துள்ளனர்.

மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் அதிகம் பேர் பயின்று வருகின்றனர். மேற்கண்ட ரயில்களை அதிகமாக மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட ரயில்கள் சிதம்பரத்தில் நிற்காமல் சென்றால், கடலூர் அல்லது நாகை சீர்காழி ஆகிய ரயில் நிலையங்களுக்கு சென்று அவர்களை ரயில் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவாகும் என அம்மாணவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.