கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சுழல் விளக்குக் காரில் ரயில்வே அதிகாரி போல நடித்து தண்டவாளங்களைக் கடத்திய கும்பல்

ரயில்வே அதிகாரி போல நடித்து பணத்தை மிரட்டி வாங்கியும், தண்டவாளங்களை கடத்தியும் சமூக விரோதச் செயலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :16 ஜூன் 2014, 7:31 am

ஜபலின் ஜான்

ரயில்வே அதிகாரி போல நடித்து பணத்தை மிரட்டி வாங்கியும், தண்டவாளங்களை கடத்தியும் சமூக விரோதச் செயலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த  4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துரை ஈங்கூர் ரயில்நிலையங்களில் கடந்த ஒரு மாதமாக இளைஞர் ஒருவர்,  ரயில்வே அதிகாரி என்று கூறிக் கொண்டு ரயில் நிலையத்தில் பணியாற்றிம் ஊழியர்களை மிரட்டுவதும், அவர்களிடம் பணம் பிடுங்குவதும், ரயில் நிலையங்களில் இருக்கும் தண்டவாளங்களை எடுத்துச் செல்வதுமாக இருந்துள்ளார்.

அவரிடம் ரயில்வே ஊழியர்கள் விசாரித்த போது, அவர் ஐஆர்பிஎஸ் அடையாள அட்டையை காட்டியதால் ஊழியர்கள் அமைதியாக இருந்துவிட்டனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை ஈங்கூர் ரயில் நிலையத்தில் அதிகாரிகளை மிரட்டி ரயில் தண்டவாளங்களை வேனில் எடுத்துக் கொண்டு சென்ற போது, அங்கு வந்த ஈரோடு ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலிஸார் அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்தினர்.

சுழல் விளக்கில் வந்த இளைஞரின் பெயர் மற்றும் அடையாள அட்டையை விசாரித்த போது அவர் போலி அதிகாரி என்பது தெரிய வந்தது.

இளைஞரை பிடித்து விசாரித்ததில், அவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உலகபுரம் என்பதும், நாச்சிமுத்து என்பவரது மகன் சுதாகரன் (24) என்பதும் தெரிய வந்தது.

பொறியியல் பட்டதாரியான சுதாகரன், யுபிஎஸ்சியால் நடத்தப்படும் ஐஆர்பிஎஸ் தேர்வெழுதி 2 முறையும் தோல்வி அடைந்தவர் ஆவார்.

அதன்பிறகே போலியாக அதிகாரி என்று நாடகமாடி தண்டவாளங்களை கடத்தி வருவதுதெரிய வந்தது.

சுதாகருக்கு உடந்தையாக சுழல் விளக்கு காரை ஓட்டி வந்த ஓட்டுநர் பிரகாஷ் (சென்னிமலை உப்பிலிப்பாளையத்தை சேர்ந்தவர்), தண்டவாளங்களை கடத்த உதவிய மினி லாரியின் ஓட்டுநர் சுப்ரமணி (31), ரயில் தண்டவாளங்களை பெற்றுக் கொண்ட பெருந்துரை இரும்பு வியாபாரி ஜீவானந்தம் (38) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். சுழல் விளக்கு பொறுத்தப்பட்ட கார், மற்றும் மினி லாரி ஆகிய 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 46,000 மதிப்புள்ள தண்டவாளங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நால்வரும் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.