நெல்லையில் மாநகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே அனுமதியின்றி கட்டப்பட்ட தேநீர் கடையை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஜெ.சி.பி. பணியாளர் சுந்தரம் அதிகாரிகள்


திருநெல்வேலியில் மாநகராட்சி ஜெ.சி.பி. ஓட்டுநரை தாக்கியதை கண்டித்து எஸ்.சி, எஸ்.டி. பணியாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி கொக்கிரகுளம் அருகே அனுமதியின்றி கட்டப்பட்ட தேநீர் கடையை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஜெ.சி.பி. பணியாளர் சுந்தரம் அதிகாரிகள் முன்னிலையில் கடை உரிமையாளர் தாக்கியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்தை கண்டித்தும், மாநகராட்சி பட்டியல் இன வகுப்பை சேர்ந்த பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டு்ம் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை
மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகராட்சி எஸ்.சி மற்றும் எஸ்.டி. பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் ஏ. பட்டன் தலைமை வகித்தார்.
அமைப்பின் நிர்வாகிகள் முருகன், பொன்னுசாமி, சாமுவேல் முன்னிலை வகித்தனர்.அமைப்பின் பொருளாளர் செல்வம், மத்திய மாநில அரசின் எஸ்.டி மற்றும் எஸ்.சி ஊழியர் நலச்சங்க மாவட்டத் தலைவர் கு. ஹரிராம், சமூக ஆர்வலர் தயாளன், சிவா (திமுக), பி.எஸ்.என்.எல். எஸ்.டி மற்றும் எஸ்.சி. சங்க நிர்வாகி ராஜேந்திரன், அகில இந்திய ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி பி. செல்லையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...