ஸ்ரீவிலி. அருகே இருவர் விஷம் குடித்து தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் (48). குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த பழனியம்மாள், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் மகள் பாக்கியவதி (22) கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாச்சியார்பட்டியைச் சேர்ந்தவர் சஞ்சீவி (40). இவர் அணைத்தலைப்பட்டி-வன்னியம்பட்டி இடையே ஒரு காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது.
இவரது சடலத்தைக் கைப்பற்றி, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இது குறித்தும் வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...