ஸ்ரீமுஷ்ணம் அருகே மின்சாரம் தாக்கி விஜய் ரசிகர் மரணம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சோழத்தரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். கூலித்தொழிலாளியான இவரது மகன் பிரசாந்த் (20). நடிகர் விஜய் தீவிர ரசிகரான இவர் அதே


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மின்சாரம் தாக்கிய விஜய் ரசிகர் ஒருவர் சனிக்கிழமை இறந்தார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள சோழத்தரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். கூலித்தொழிலாளியான இவரது மகன் பிரசாந்த் (20). நடிகர் விஜய் தீவிர ரசிகரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சில ரசிகர்களுடன் நடிகர் விஜய் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்து வெள்ளிக்கிழமை இரவு டிஜிட்டல் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேனர் வைக்க குழி தோண்டி இரும்பு கம்பத்தை பூமியில் புதைக்க முயற்சித்த போது மேலே சென்ற உயர்மின்அழுத்த கம்பியில், இரும்பு கம்பம் பட்டு மின்சாரம் பாய்ந்தது. கம்பத்தை பிடித்திருந்த பிராசாந்த் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல்கருகி இறந்தார். இதுகுறித்து சோழத்தரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...