கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மின்மாற்றி பழுதானதால், சுமார் 20 கிராமங்களில் மின்மோட்டார் புகைந்தது: விவசாயிகள் அவதி

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) பழுதடைந்ததால், சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உயர்அழுத்த மின்சாரத்தால் வேளாண்

News image
Updated On :21 ஜூன் 2014, 3:02 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு துணை மின்நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) பழுதடைந்ததால், சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உயர்அழுத்த மின்சாரத்தால் வேளாண் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் காயில்கள் புகைந்து நாசமானது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு துணை மின்நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் கடந்த ஒருவாரகாலமாக பழுதுற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயர்மின் அழுத்தம் ஏற்பட்டு பேரூர், காணூர், நாச்சியார்பேட்டை, சாந்திநகர், முடிகண்டநல்லூர், குமாரகுடி, வலசக்காடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மின்மோட்டார்களிள் காயில்கள் புகைந்து வீணானது. இதனால் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனை கண்டித்து பேரூரில் கடந்த வியாழக்கிழமை அப்பகுதி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மின்வாரிய உதவிப் பொறியாளர் கணபதி உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சரிசெய்வதாக தெரிவித்தனர். ஆனால் சனிக்கிழமை வரை டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்படாததால், மேற்கண்ட கிராமங்கள் கூடுதல் மின்அழுத்தத்தால் தமிழகஅரசின் விலையில்லா கிரைண்டர், மிக்சி, டிவி ஆகியவை புகைந்து பழுதானதாக அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.