கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

சிதம்பரம் பாரில் மதுபாட்டில்கள் விற்ற 3 பேர் கைது: 359 மதுபாட்டில்கள் பறிமுதல்

சிதம்பரம் பஸ்நிலையம் அருகே பாரில் சனிக்கிழமை மதுபாட்டில்கள் விற்ற மூன்று பேரை நகர போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 359 மதுப்பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :22 ஜூன் 2014, 1:11 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் பஸ்நிலையம் அருகே பாரில் சனிக்கிழமை மதுபாட்டில்கள் விற்ற மூன்று பேரை நகர போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 359 மதுப்பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் பஸ்நிலையம் நுழைவுப்பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடையும், அருகாமையிலேயே பாரும் உள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் மதுபானக்கடை மூடிய பிறகு பாரில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஷ்வா லாமேக், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் சனிக்கிழமை இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாரில் அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த 359 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் பாரில் இருந்த சிதம்பரம் கொ்தங்குடித்தெருவைச் சேர்ந்த ராஜா (42), அண்ணாதெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் 932), புவனகிரி ஆதிவராகநல்லூரைச் சேர்ந்த சரவணன் (24) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

தலைமறைவான பாஸ்கர் (38) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.