சிதம்பரத்தில் சிதம்பரேஸ சத்சங்க ஆண்டு விழா, பரிசளிப்பு விழா
நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஆர்.பாஸ்கரதீட்சிதர் தலைமை வகித்தார். தியாகப்ப தீட்சிதர் முன்னிலை வகித்தார். டி.செல்வரத்தின தீட்சிதர் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக


சிதம்பரம் ஸ்ரீசிதம்பரேஸ சத்சங்க ஆண்டு விழா மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா புதுத்தேரு வேதபாராயண மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஆர்.பாஸ்கரதீட்சிதர் தலைமை வகித்தார். தியாகப்ப தீட்சிதர் முன்னிலை வகித்தார். டி.செல்வரத்தின தீட்சிதர் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர்கள் எஸ்.திருஞானசம்பந்தம், வி.சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கிப் பேசினர். சத்சங்க செயல்பாடுகள் குறித்து எம்.கிருஷ்ணசாமி தீட்சிதர் விளக்கவுரையாற்றினார். எஸ்.வெங்கடேச தீட்சிதர் நன்றி கூறினார். விழாவில் ஆன்மீக சேவையை பாராட்டி ஜா.ராகவனுக்கு பாராட்டு மடலும், பரிசும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. வேதத்தில் தேர்ச்சி பெற்ற வித்யார்த்திகளுக்கும், சிவபுராண போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கும், பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஃபைத் தொண்டு நிறுவனத்திற்கு உபகரணங்களும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...