பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை மாவட்டத்தில் நீரின்றி கருகும் வாழைப்பயிர்: விவசாயிகள் கவலை!

பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காததால் தாமிரவருணி பாசனத்தில் நடவு செய்யப்பட்டுள்ள வாழைப்பயிர் நீரின்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

News image
Updated On :23 ஜூன் 2014, 8:21 am

ஷேக் அப்துல்காதர்

பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காததால் தாமிரவருணி பாசனத்தில் நடவு செய்யப்பட்டுள்ள வாழைப்பயிர் நீரின்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

தாமிரவருணி பாசனத்தில் பாபநாசம் அணையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி கால்வாய், பாளையம் கால்வாய், கோடகன் கால்வாய், கன்னடியன் கால்வாய், வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய் ஆகிய 7 கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீ்ர் வழங்கப்படுகிறது

இப்பாசனத்தில் பிரதானமாக நெல் பயிரும், அடுத்தபடியாக வாழைப்பயிரும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தாமிரவருணி பாசனத்தில் விவசாயிகள் 3 ல் ஒரு பங்கு ஏக்கரில் வாழைப்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். கார், பிசானம் ஆகிய இரு பருவங்களில் நெல் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்படுகிறது. வாழைப்பயிர் 12 மாத பருவ காலமாகும். நெல் பயிர் 110 முதல் 120 தினங்கள் பருவ காலம்.
ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை செய்யும் பருவம் கார் சாகுபடி. நிகழ் கார் பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து இன்னமும் தண்ணீர் திறக்காததால்,
சாகுபடி பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது. இந்த பருவத்தில் தென்மேற்கு பருவ மழை மூலம் தண்ணீ்ர் கிடைக்கும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. மழை நீடிக்காத காரணத்தால் அணைகளுக்கு எதிர்பார்த்தவாறு நீர்வரத்து கிடைக்கவில்லை. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வாழைப்பயிர் நடவு செய்யப்பட்டது. சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் வாழைப்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காததால் பாசனக் குளங்களுக்கு நீர்வரத்து இல்லை. மழை இல்லாததால் மானாவாரிக் குளங்களும் வறண்டு கிடக்கிறது.

ஆகவே திருநெல்வேலி மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழைப்பயிர்கள் நீரின்றி கருகும் சூழல் உருவாகியுள்ளது. குளங்கள், கிணறுகளில் கிடைக்கும் நீரை கொண்டு வாழைப்பயிருக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் நடவு செய்யப்பட்டுள்ள வாழைப்பயிரை காப்பாற்ற முடியுமா என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.