ஜூன் 28,29 சிதம்பரத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு வீரர்கள் தேர்வு
மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்று விளையாடுவதற்கு சிதம்பரத்தில் ஜூன் 28,29 தேதிகளில் தேர்வு செய்யும் போட்டி நடைபெறவுள்ளது என கடலூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் எஸ்.சேகர்


மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்று விளையாடுவதற்கு சிதம்பரத்தில் ஜூன் 28,29 தேதிகளில் தேர்வு செய்யும் போட்டி நடைபெறவுள்ளது என கடலூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் எஸ்.சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு: ஜூலை 2-ம் தேதி கோயம்புத்தூரில் மாநில சதுரங்க போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்கு மாவட்ட அளவில் 15 வயது, 19 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் போட்டி வருகிற ஜூன் 28, 29 ஆகிய இரு தினங்கள் சிதம்பரம் தேரடிபிள்ளையார் கோயில் தெரு வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்கேற்க ஆர்வம் உள்ள வீரர்கள் கீழ்கண்ட சதுரங்க அமைப்பு பிரதிநிதிகளை தொடர்பு கொள்ளலாம்: கடலூர் எஸ்.பிரேம்குமார்- 95433 70421, சிதம்பரம் வி.சங்கர்- 94423 18080, நெய்வேலி ஆர்.விநோத்- 99762 30395, விருத்தாசலம் ஆர்.அருணாசலம்- 94430 51348, காடாம்புலியூர் ஆர்.ராஜாங்கம்- 77089 15901, பண்ணுருட்டி ஆர்.பாண்டியன்- 90958 62842, காட்டுமன்னார்கோயில் சங்கர்- 99941 97790.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...