காதல் ஜோடி தலைமறைவால் பெண்ணின் தந்தை தற்கொலை: காதலன் உள்பட 3 பேரை கைது செய்யக்கோரி தொடர்ந்து போராட்டம்

ஆம்பூர் அருகே இரு சமுதாயத்தைச் சேர்ந்த காதல் ஜோடி தலைமறைவானதால் மனமுடைந்த பெண்ணின் தந்தை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பெற்றோரை மிரட்டிய மூன்று பேரையும் கைது
Updated on
1 min read

ஆம்பூர் அருகே இரு சமுதாயத்தைச் சேர்ந்த காதல் ஜோடி தலைமறைவானதால் மனமுடைந்த பெண்ணின் தந்தை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பெற்றோரை மிரட்டிய மூன்று பேரையும் கைது செய்ய வலியுறுத்தி ஆம்பூர் பொது மருத்துவமனையில் பெண்ணின் சகோதரர் தீக்குளிக்க முயன்றார்.இதனையடுத்து போலீஸார் பெண்ணின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 10 மணிமுதல் தொடங்கி சுமார் 7 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பெண்ணின் காதலன் உள்பட 3 பேரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்துவருகின்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com