கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பக்தர் வழங்கிய ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க அபிஷேக கலசம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஓவ்வொரு

News image
Updated On :25 ஜூன் 2014, 10:14 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்ய ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க அபிஷேக கலசத்தை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஓவ்வொரு பூஜைக்கும் முன்னதாக ஸ்ரீசந்திரமௌலீஸ்வரருக்கு (ஸ்படிக லிங்கம்) அபிஷேகம் செய்து தான் கால பூஜை நடைபெறும். அந்த ஸ்ரீசந்திரமௌலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய 600 கிராம் எடை கொண்ட தங்கத்தினாலான சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அபிஷேக கலசத்தை பெயர் வெளியிட விரும்பாத  பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். தங்க கலசத்தை புதன்கிழமை ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கர தீட்சதரிடம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.